Showing posts with label Awareness. Show all posts
Showing posts with label Awareness. Show all posts

Thursday, January 12, 2012

PAMBAN SPIRULINA FARM

Nature's Blue Green Algae Food
"SPIRULINA"
The best vegetable protein source with a protein content of 65% higher than any other natural food with 18 types of amino acids, vitamins A,B,H,B6, B12 and minerals, Beta Carotene, Carbohydrates.
Benefits of Spirulina
  • It is the most digestible protein food.
  • Controls Blood Sugar, Blood pressure in human body.
  • Reduce the risk of cancer and increase the antioxidant capacity.
  • Gamma - Linolenic Acid (GLA) in mother's milk help to develop healthy babies.
  • Preventing Hair loos and helps Hairs to grow well.
  • Rich vitamin B-12 gives healthy nerves and tissues.
  • Improving Energy for all age people.
  • Activating the function of Brain.
  • Spirunlina is rich in Iron, Magnesium and Trace minerals and is easier to absorb than Iron supplements.
For More Details
R. Balamurugan
PAMBAN SPIRULINA FARM
C.Alambady, Chidambaram
Cell : 90475 36303

Sunday, August 28, 2011

Innovation Progaram

National Innovation Foundation  India, Department of Science and Technology (Govt of India) with Kalpavirusham - workshop for Traditional livestock practitionoers and healers at Mathalamparai on 26-08-2011

Friday, August 27, 2010

நல்ல குரல்வளத்துக்கு..


For a sweet voice - Food Habits and Nutrition Guide in Tamil



நீர்பிரம்மி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

 இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது

. Tamil - Neer brammi English - Thyme leaved gratilo Malayalam - Neer brahmi Telugu - Sambrani chetta Sanskrit - Brahmi Botanical Name - Bacopa monnieri

 நீர்பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.

 நினைவாற்றலைத் தூண்ட: 

 பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

 நரம்புத் தளர்வு நீங்க:

மூளையை தலைமையிடமாகக் கொண்டு உடலெங்கும் பின்னிப் பிணைந்து காணப்படும் நரம்புகள்தான் மனித செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாகின்றன. இந்த மெல்லிய நரம்புகளில் சில சமயங்களில் மன அழுத்தம், கோபம் காரணமாக ஆங்காங்கு நீர் கோர்த்துக்கொள்ளும். மேலும் வெப்பப் பகுதியில் வேலை செய்பவர்களின் நரம்புகளும் பாதிக்கப்படும். நரம்புகள் பலமாக இருந்தால்தான் உடல் புத்துணர்வுடன் செயல்படும். இத்தகைய நரம்பு தளர்வு நீங்க பிரம்மி இலைகளை உலர்த்தி கசாயம் செய்து அருந்திவருவது நல்லது.

 சிறுநீர் பெருக:

 ஒரு மனிதன் ஆரோக்கியமாக செயல்பட அவன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். அதுபோல் அவன் தினமும் 1 லிட்டர் முதல் 1 1/2 லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். சிறுநீர் சீராக வெளியேறினால் தான் உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். இவை வெளியேறாமல் நின்றுவிட்டால் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் நீர் எரிச்சல் உண்டாகும். இவர்கள் நீர்ப்பிரம்மி இலைகளை கசாயம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

 மலச்சிக்கல் நீங்க:

 மலச்சிக்கல், மனச்சிக்கல் ஆதி நோய்கள். மலச்சிக்கலைப் போக்கினாலே உடல் ஆரோக்கியம் பெறும். சிலருக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு சாப்பிட்டாலும் மலம் எளிதில் வெளியேறாது. இவர்கள் நீர்பிரம்மி இலைகளை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். நீர்பிரம்மி இலைகளை சாறு பிழிந்து நெய் சேர்த்து காய்ச்சி கொடுத்து வருதல் நல்லது அல்லது நீர்பிரம்மி சாறுடன் 8 கிராம் கோஷ்டத்தை பொடித்து சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் புளிச்ச ஏப்பம் நீங்கும்.

 நல்ல குரல்வளம் கிடைக்க: 

 நீர்பிரம்மி இலைகளை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கம்மல் தீருவதுடன் நல்ல குரல்வளம் கிடைக்கும். உச்சரிப்பு சரிவராத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். இதன் வேரை அரைத்துக் கொதிக்க வைத்து நெஞ்சில் பூச கோழைக்கட்டு நீங்கும். நீர்பிரம்மி இலைகளை சிற்றாமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு அதையே அவ்வீக்கங்களின் மீது வைத்துக் கட்டிவர வீக்கங்கள் கரையும். நீர்பிரம்மியை பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவோம்.

Thursday, April 1, 2010

ஒரு யூனிட் மின்சாரம்... save the power


மாதம்தோறும் மீட்டரில் கணக்குப் பார்த்து எழுதிவிட்டுப் போகும் மின்சாரத்துறை ஊழியர்களிடம் "இந்த மாதம் எத்தனை யூனிட் ஆகி இருக்கிறது?'' என்று கேட்பது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வழக்கமான கேள்வி. அதிலிருந்து மின்சார 'பில்' அந்த மாதம் எவ்வளவு ஆகும் என்று கணக்கிடுவதற்காகத்தான் அந்தக் கேள்வி. ஆனால், ஒரு யூனிட் மின்சாராத்தில் என்னென்ன செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?


ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகித்து 


  • 2500 காலன் தண்ணீரை 50 அடி உயரம் பம்ப் செய்யலாம்.
  • 40 வாட் விளக்கை 25 மணி நேரம் எரிக்கலாம்.
  • 60 துண்டு ரொட்டிகளை வாட்டிச் சமைக்கலாம்.
  • நான்கு பேருக்கு சிற்றுண்டி தயார் செய்யலாம்.
  • ஆறு காலன் வெந்நீர் போட்டுக் குளிக்கலாம்.
  • ஆறு மணி நேரம் தரையைப் பாலிஷ் செய்யவோ சுத்தம் செய்யவோ உபயோகிக்கலாம்.
  • ஒரு தையல் மிஷினை 20 மணி நேரம் ஓட்டலாம்.
  • ஒரு சலவை மிஷினில் ஆறு பேர்களுடைய உடையை இரண்டு வாரங்களுக்கு வெளுக்கச் செய்யலாம்.
  • தலைக்கு மேல் சுற்றும் மின் விசிறியை 10 மணி நேரம் உபயோகிக்கலாம்.
  • 180 பவுண்டு வெண்ணை எடுக்கலாம்.
  • 2500 பால் புட்டிகளைக் கழுவலாம்.
  • இரண்டு காலன் தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.
  • பத்து பவுண்டு ஐஸ் கட்டி செய்யலாம்.